செம்மொழி மாநாடு
கோவை நகரத்தையே ‘மு க ‘ குடும்பத்தார் மிரட்டி நடத்திய மாநாடு. மு க குடும்ப மாநாடு. இதற்கான செலவு ஐநூறு கோடி ருபாய். தனக்கு இப்பிடி ஒரு மாநாடு நடத்த சொல்லி தமிழ் தாயே அந்த கருணாநிதி கனவில் வந்து சொல்லியதா ?? ஜெயலலிதா ஒரு உலக தமிழ் மாநாடு நாட்டிய பொது தி.மு.க வினர் தங்கள் அதற்க்கு என்ன என்ன ஆர்பாட்டம் செய்தார்கள் என்றதை நினைவில் கொண்டு வந்து பார்த்திருக்க வேண்டும். அதை விட பத்து மடங்கு செலவில் தனது பேரையும், பதவியின் பலத்தையும், (அடி) ஆள் பலத்தையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார் கருணாநிதி. கேட்டதற்கு அவர் சொன்ன கரணம் “உலக தமிழ் மாநாடு நடந்த பொழுது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கவில்லை அதனால் தான் எதிர்ப்பு தெரிவித்தோம்” .
கோவை நகருக்கு லாரி லாரியாக கட்சி குண்டர்கள். எதற்கு ??? தமிழை வளர்க்கவா ??? இல்லை ஓசி சாப்பாட்டில் உடம்பை வளர்த்துக்கொள்ள. கோவையில் உணவகங்களையும், விடுதிகளையும் தி.மு.க வினர் சூறையாடினர். இந்த அந்த ஐந்து நாள் அரசு விழாக்கள் எல்லாம் ரத்து. மாநிலமெங்கும் ஐந்து நாள் வெறிச்சோடி கிடந்த அரசு அலுவலகங்கள். அனால் தடை இன்றி இயங்கிய ஒரே அரசு நிறுவனம் டாஸ்மாக்.
வாழ்க தமிழ் மாநாடு.
ஒரு நாட்டின் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிர்க்கதவன் தேச துரோகி. மத்திய அமைச்சர்கள், கட்சி குண்டர்கள் எல்லோரும் எழுந்து நின்று கொண்டிருக்கையில். கையால் ஆகாத கருணாநிதி மட்டும் இருகையில் அமர்த படி இருந்தார் (என் சார், அது ஹிந்தில இருப்பதாலா ????, இல்ல உமக்கு தேசிய கீதம் புரியலியா ???). நமீதாவுக்கும் சிம்ரனுக்கும் விருது கொடுக்கும்போது மட்டும் எழுந்து நின்னு கொடுத்தீர் ? ( தேசிய கீதத்தை விட நமீதா உயரமனதாக அந்த குருட்டு கண்களுக்கு தெரிந்ததா ?)
குடும்பத்தில் எல்லோரயும் ஒரு முறை கடைசியாக பார்க்க வேண்டும் என்று கிழவனுக்கு ஆசை வந்து விட்டது. அரசு பணம் தன நம் கையில் இருக்கிறதே ஒரு மாநாடு வைத்தல் குடும்பத்தாரையும் பார்க்கலாம், கட்சி குண்டர்களையும் பார்க்கலாம். அரசியல் குள்ள நரிக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
பாராளுமன்றத்திலும் மத்திய அமைச்சரவை கூடத்திலும் ஒரு போதும் ஆஜராகாத அஞ்ச நெஞ்சன் மாநாட்டில் தினமும் ஆஜர். ராஜா, கனிமொழி, மற்றும் அணைத்து உறவினரும் வந்து சிறப்பித்த விழாவை தன பழைய கழக தொலைக்காட்சியில் (சன்) நேரடி ஒளிபரப்பு. என்ன தன குடும்ப சண்டை இருந்தாலும் மக்களை கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒன்று கூடி விடுவார்கள் அந்த பங்காளிகள்.
பொது மக்களுக்கு ஒரு பைசாக்கு பிரயோஜனம் இல்லாத ஐநூறு கோடி செலவு. ஒரு தொழில்நுட்ப பூங்கா கட்டியிருக்கலாம். பல பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஏழை எளியோருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம் (பத்து வருஷத்திற்கு). குடிசைகளில் உள்ள லட்ச கணக்கானோருக்கு வீடு கட்டி குடிதிருக்கலம். இதையெல்லாம் விட்டு விட்டு தமிழை வளர்க்கிரரம்.
மக்களே விழித்திருங்கள். சாகும் நேரத்தில் கட்சியை உயில் எழுதும் போது தமிழ்நாட்டையும் சேர்த்து வாரிசுகள் பேரில் எழுதி வைத்து விடுவர். 2011 ல் பெரும்பான்மை இன்றி குடியரசு தலைவர் ஆட்சி வந்தாலும் பரவக இல்லை. இந்த கொள்ளை கும்பலை தமிழ்நாட்டில் மீண்டும் உலவ விடாதிர்கள். கருணாநிதி செத்தால் அழகிரி / ஸ்டாலின். அதற்க்கு பின்னும் அடுத்த கொள்ளையர் தயாராக உள்ளார்கள் அது உதயநிதியும் தயாநிதியும் தான். தற்சமயம் சினிமாவை கொள்ளை அடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பதிலேந்து யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டை யாராலும் காப்பாத முடியாது.
மறுபடியும் சொல்லுகிறேன்.....
முடிவு உங்கள் கையில். கட்சிக்காரர்கள் கொடுக்கும் காசை மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அது உங்கள் காசு. மொத்தமாக நம்மிடம் கொள்ளை அடித்து நமக்கே சில்லரையாக விநியோகம் செய்கிறார்கள் மு. க அண்ட் சன்ஸ். உங்கள் தொகுதியில் இருந்து நீங்கள் முழு மனதாக தேர்ந்தெடுக்கும் ஒரு நல்லவன் மட்டுமே கோட்டைக்கும் நாடாளுமன்றத்திற்கும் செல்ல முடியும். இது இந்த நாடு உங்களுக்கு தந்த உரிமை. அதை தக்கவைத்து கொள்ளுங்கள்.
மீண்டும் சந்திப்போம் ... அது வரைக்கும் சிந்திப்பேன் ...
உங்களில் ஓருவன் ....